நேதாஜி மரணம் அடைந்தாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா?

275
netaji subhas chandra bose

நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் மரணம் அடைந்தாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தேசிய ஆவண காப்பகத்திற்கு, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ், வெளிநாட்டிற்கு சென்றபோது, மர்மமான முறையில், விமான விபத்தில் இறந்ததாகக் கூறப்படுகிறது. அவரது மரணம் குறித்த ஆவணங்கள், அண்மையில் வெளியிடப்பட்டன.

இருப்பினும் அதில் தனக்கு திருப்தி அளிக்கும் வகையிலான தகவல்கள் இடம் பெறவில்லை எனக் கூறி, சமூக ஆர்வலர், அவ்தேஷ் குமார் சதுர்வேதி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என தனது மனுவில் கோரியுள்ளார்.

இதையடுத்து சதுர்வேதி எழுப்பியுள்ள கேள்விகளுக்கு, உரிய ஆவணங்களுடன் பதில் அளிக்குமாறு மத்திய ஆவண காப்பகத்திற்கு, தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.