திமுக எந்தெந்த தொகுதிகளில் போட்டி? – விறு விறு அரசியலில் திமுக நகர்வு

1184

திமுக சார்பில் எந்தெந்த தொகுதிகளில் யார் போட்டியிட போகிறார்கள் என்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புகின்ற வேட்பாளர்களுக்கான நேர்காணல் நேற்று நடைப்பெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி ஆர் பாலு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நேர்காணலில், 900 பேர் பங்கேற்றனர்.

ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்ற பேச்சு வார்த்தை முடிந்துள்ளது.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிக்கான பேச்சுவார்த்தையும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வழங்கப்பட்ட 2 தொகுதிகளுக்கான பேச்சுவார்த்தையும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of