என்னை தவறாக பேசப்பேச, அவருடைய ஊழல் தான் வெளிப்படுகிறது

440

இங்கிலாந்தில் இயங்கி வந்த ‘பேக்கப்ஸ்’ என்ற நிறுவனத்தின் இயக்குனர்களில் ராகுல் காந்தியும் ஒருவர் எனவும், அவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றிருப்பதாகவும் பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி உள்துறை அமைச்சகத்தில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்த விவகாரம் சமீபத்தில் சர்ச்சையை கிளப்பி இருந்த நிலையில், பிரதமர் மோடியும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தியை அவர் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். மத்திய பிரதேசத்தின் சாகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசும்போது இது குறித்து மோடி கூறியபோது,

எனது புகழை கெடுப்பதே தனது நோக்கம் என ராகுல் காந்தி ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் அவர் எந்த அளவுக்கு என்மீது சேற்றை வாரி எறிகிறாரோ, அந்த அளவுக்கு அதிக தாமரைகள் மலரும். என்னை அவர் தவறாக பேசப்பேச அவரது ஊழல்கள்தான் வெளிப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of