செயற்கை கருத்தரிப்பு மூலம் வெள்ளை திமிங்கலங்கள்..!

538

திமிங்கலம் சுமார் 30 யானைகளின் எடைக்கு சமமானது. இவற்றில் 70-க்கும் மேற்பட்ட வகைகள் காணப்பட்டாலும், அதில் வெள்ளை நிற திமிங்கலங்கள் மட்டும் மிகவூம் அபூர்வமாக பார்க்கப்படுகிறது.

அவ்வாறான 3 அபூர்வ  வெள்ளை நிற திமிங்கலக்குட்டிகள், சீனாவில் செயற்கை கருத்தரிப்பு மூலம் பிறந்துள்ளன.

தெற்கு சீனாவின் சூகாய் மாகாணத்தில் உள்ள கடல் உயிர் இனப்பெருக்க தளத்தில் பிறந்த இந்த மூன்று திமிங்கலக்குட்டிகளும் கடந்த 15 நாட்களாக சிறப்பு மருத்துவ குழுவினரின் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பார்வையாளர்களுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

திமிங்கலக்குட்டிகள் ஒன்றோடு ஒன்று விளையாடி மகிழ்வதை, ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்

.ரத்த நிறமிகள் குறைபாடு காரணமாக, இதுபோன்ற வெள்ளை நிற திமிங்கலங்கள் பிறப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சூகாய் கடர் உயிர் இனப்பெருக்க தளத்தில் மொத்தம் 31 வெள்ளை நிற திமிங்கலங்கள் உள்ளன.

இவற்றில் பெரும்பாலும் செயற்கை கருத்தரிப்பு மூலம் பிறந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of