ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்துக்கு அனுமதி…! உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

260

ஜெனீவா: ஹைட்ராக்ஸ் குளோரோகுயின் மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு மீண்டும் அதற்கு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு எந்த மருந்தை தருவது என்பது தெரியாமல் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு முறையை பயன்படுத்துகிறது. பெரும்பாலும் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் என்ற மலேரியாவுக்குப் பயன்படுத்தப்படும் மருந்து பயன்படுத்தப்படுகிறது.

இந்த மருந்தை ஏராளமாக இந்தியாவிடம் இருந்து வாங்கி பயன்படுத்தி வருகிறது அமெரிக்கா. இதையடுத்து அந்த மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் தற்காலிக தடை விதித்தது.

இதையடுத்து இப்போது மீண்டும் அந்த மருந்தைப் பயன்படுத்த சொல்லி, உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. இதனை உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியோசஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிராக, சிகிச்சை, நோய் தடுப்பு மற்றும் நோய் கண்டறியும் செயல்பாடுகளில் அறிவியல் கண்ணோட்டத்துடனும், தீர்வுகள் மற்றும் ஆதரவுடனும் உலக சுகாதார அமைப்பு தொடர்ச்சியாக செயல்படும் என்றும் அவர் கூறி உள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of