ரஷ்யாவின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு..! ஏன் தெரியுமா..?

3019

வைரசுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசி தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் முதல் நாடாக ரஷ்யா கடந்த மாத தொடக்கத்திலேயே தடுப்பூசி ஒன்றை பதிவு செய்தது.

‘ஸ்புட்னிக் வி’ என பெயரிடப்பட்ட தடுப்பூசிக்கு 20-க்கும் மேற்பட்ட நாடுகள் முன்பதிவு செய்துள்ளன. இந்நிலையில் ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகெயில், உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய தலைவர் ஹன்ஸ் குளாஜை சந்தித்து பேசினார்.

அப்போது, ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவிப்பதாக கூறினார். மேலும், வலிமையான ஒரு தடுப்பூசியை உருவாக்கியதற்காக ரஷ்யாவிற்கு நன்றி தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

பல்வேறு விஞ்ஞானிகள், ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு தற்போது ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.