வாகன ஓட்டிகளிடம் யாரெல்லாம் அபராதம் வசூலிக்கலாம் – அரசு விளக்கம்

340

வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியவில்லை என்றால் ரூ. 1000 அபராதம் லைசென்ஸ் இல்லையென்றால் ரூ.5000 என்பது போன்று அபராதக் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தமிழக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் யாரெல்லாம் அபராதம் வசூலிக்கக் கூடாது என்பதும் எந்த அதிகாரிகள் அபராதம் வசூலிக்கலாம் என்பதும் இடம்பெற்றுள்ளது.

அதில் SSI-க்கு (சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்) குறைவான அதிகாரத்தில் இருக்கும் போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் வசூலிக்கக் கூடாது என்றும் சிறப்பு நிலை துணை ஆய்வாளர் எனப்படும் SI(கிரேடு 2) நிகரான போக்குவரத்து காவல் அதிகாரிகளே வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சோதனைச் சாவடிகளைத் தவிர்த்து வேறு எங்கு வேண்டுமானாலும் அபராதம் வசூலிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of