விசாரணை கமிஷனை சந்திக்க தயார்.. எச்சரித்த அமெரிக்கா.. கெத்து காட்டிய WHO..

835

கொரோனா வைரஸ் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என அமெரிக்காவை உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சரியாக செயல்படவில்லை என்று குற்றம்சாட்டிய அதிபர் டிரம்ப், உலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்தப்போவதாக எச்சரித்தார்.

மேலும் இது குறித்து விசாரிக்க தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்நிலையில் அதிபர் டிரம்பின் இந்த கருத்துக்கு உலக சுகாதார அமைப்பு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய டெட்ரோஸ் அதானோம், சீன அரசின் கைப்பாவையாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாக கூறுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். இதுதொடர்பாக தனி விசாரணை கமிஷனை சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of