வைரஸ் தொற்றை மறைக்க உதவிய WHO.. புது குண்டை போடும் சீன விஞ்ஞானி..!

2893

சீனாவின் வூகான் பகுதியில் தொடங்கிய வைரஸ் தொற்று, தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன்காரணமாக, சீன அரசாங்கத்தின் மீது பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர். இதுமட்டுமின்றி, சீனா தான் இந்த வைரஸ் தொற்றை திட்டமிட்டு பரப்பியது என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.

இது போன்ற சூழலில், வைரஸ் தொற்று சீனாவின் உகான் மாகாண ஆராய்ச்சிக் கூடத்தில் உருவாக்கப்பட்டதாக சீனாவைச் சேர்ந்த வைராலஜிஸ்ட் லீ மெங் யான் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு கூறியதன் பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் ஒரு வீடியோவை அந்த விஞ்ஞானி வெளியிட்டுள்ளார். அதில், வைரஸ் குறித்து உலகத்திற்கு தெரிவதற்கு முன்பே சீன அரசு அதனைக் குறித்து அறிந்திருந்ததாகவும், இதனை மறைக்க சீன அரசாங்கத்திற்கு உலக சுகாதார நிறுவனம் உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement