அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? – கருத்துக்கணிப்பு வெளியிட்ட தனியார் நிறுவனம்..!

846

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தற்போது குடியரசுக் கட்சியைத் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் அதிபராக உள்ளார்.

வருகின்ற 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் இவரே போட்டியிடவுள்ளார்.

இவரை எதிர்த்து, ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ வால்ஷ் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2020 தேர்தல் குறித்து ராஸ்முசன் (Rasmussen) என்ற நிறுவனம் நாடு முழுவதும் தொலைபேசி மற்றும் இணையதளம் மூலம் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது.

இதில் அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக வாக்களிப்போம் என்று 52 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். ஆதரவாக, வாக்களிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.

மேலும் 6 விழுக்காட்டினர் தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை என்ற போதும், தேர்தல் நேரத்தில் நிலவும் சூழலை பொறுத்து வாக்களிப்போம் என குறிப்பிட்டதாக கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.