இந்த வாரம் வெளியேறப்போவது யார்..? வெளியான தகவல்..!

2315

பிக்-பாஸ் நிகழ்;ச்சியில் வாரத்தின் கடைசி இரண்டு நாட்களில், ஹவுஸ் மேட்ஸ்களுடன் கமல் ஹாசன் உரையாடுவது வழக்கம். மேலும், அப்போது தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போகும் நபர்கள் குறித்து அறிவிப்பார்கள்.

அந்த வகையில், ஆரி, ஆஜித், அனிதா சம்பத், சுரேஷ், பாலா ஆகியோர் இந்த வார எவிக்சனுக்கு, தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், யார் வெளியேறுவார்கள் என்று அனைவரும் காத்திருந்த நிலையில், அதுதொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, சூப்பர் சிங்கர் புகழ் ஆஜித் தான் இருப்பதிலேயே குறைவான வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால், அவரிடம் எவிக்சன் ஃப்ரி பாஸ் இருப்பதால், அதனை பயன்படுத்தி தப்பித்து விட்டாராம்.

இதன்காரணமாக, இந்த முறை பிக்-பாஸ் வீட்டில் இருந்து யாரும் வெளியேற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையா..? பொய்யா..? என்பது இன்றைய நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்ட பிறகே தெரியவரும்..

Advertisement