மரபை போற்றிய சுரதா! தமிழ் மறை போற்றும் இவர் யார்?

2426

உவமை கவிஞர் சுராதாவின் 98 ஆவது பிறந்தாநாளை முன்னிட்டு அவர் கடந்து வந்த வாழ்கையையும், பெற்ற புகழ்களையும் பரைசாற்றும் விதமாக இந்த செய்தியை காண்போம்

கனியிருப்ப காய் கவர்ந்தற்று என்பது போல், தாய் பால் இருக்க, நாய் பால் உண்ண எவரேனும் முன்வருவார்களா ? என்று வள்ளுவரின் குறளுக்கே உவமை கொடுத்த உவமை கவிஞர் சுரதா பிறந்த தினத்தில் அவரி புகழ் அறிவோம்.

“வழிநடைப் பயணம் செய்பவர்க் கெல்லாம்
வாய்மொழியே நல்ல வாகன மாகும்.
பொழிநிழல் இயற்கையின் பூப்பந்த லாகும்
புவியே பொதுமக்கள் புத்தக மாகும்.”

என்ற சுரதாவின் சொற்களை நினைவு கூர்ந்து வரலாற்று நினைவுகளை காட்சி படுத்துவோம்.

செய்யுள் மாறத மரபு கவிதைகளுக்கு உவமை கொடுப்பதில் புகழ் பெற்றவரும் மிக சிறந்த உவமை கவிஞர் தான் சுரதா.

suratha

கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், என பல் வகை ஆற்றல் கொண்ட சுப்புரத்தினம் என்னும் கவிஞர் சுரதா நவம்பர் 23, 1921 ஆம் ஆண்டு தஞ்சையில், திருவேங்கடம் – செண்பகம் அம்மையார் தம்பதிக்கு பிறந்தார்.

கவிஞர் பாரதிதாசன் மீது கொண்டுள்ள பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று பெயர் மாற்றி கொண்டு பின்னர் அதை சுறுக்கமாக சுரதா என்று சுருக்கி கொண்டார்.

1941 ஆம் ஆண்டு முதல் பாவேந்தர் பாரதிதாசனுடன் சேர்ந்து தனது கவிதை வாழ்க்கையை தொடர்ந்த அவர்,பாரதிதாசன் கவிதைப் பணிக்குத் துணை நின்றார் பின்னர் தனது கவிதை ஆற்றலை வெளிக்காட்ட தொடங்கி சுரதாவின் “சொல்லடா” என்ற கவிதை 1947 ஏப்ரல் மாதம் பொன்னி இதழ் வெளியிட்டு பாரதிதாசனின் பரம்பரை கவிஞர் சுரதா என்று அறிமுகம் செய்தது. பாவேந்தரின் நாடகம் என்னும் தலைப்பில் தந்தை பெரியார், கலைவாணர் முன்னிலையில் சுரதா அமைச்சர் வேடமிட்டு நடித்து பெருமை போற்றபட்டார்.

பின்னர் தலைவன் என்ற பத்திரிக்கையில் இணை ஆசிரியராக தன் பணியை தொடங்கிய சுரதா,1954 ஆம் ஆண்டு முதல் முரசொலி பத்திரிக்கையில் தொடர்ந்து கவிதைகளை எழுதி வந்த அவர் 1955 இல் காவியம் என்ற வார இதழைத் தொடங்கினார்.

பின்னர் இலக்கியம் ,காவியம், விண்மீன், சுரதா என்னும் கவிதை இதழ்களை உதயமாக்கி கவிதை வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டார். இதை தொடர்ந்து திரைப்பட உலகிலும் முத்திரை பதித்த கவிஞர் சுரதா 1944 ஆம் ஆண்டு மங்கையர்கரசி என்னும் திரைபடத்தில் தொடங்கி 100 க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை தொகுத்துள்ளார்.

தமிழ், கவிதை, புகழ் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட புரவலர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை இணைத்துச் சில வினோதக் கவியரங்கங்களை நடத்துபவராக இருந்தார் சுரதா. படகுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் முதலிய கவியரங்குகளைக் கொண்டாட்ட நிகழ்வாக மாற்றியதில் அவருக்கு மிகுந்த பங்குண்டு, பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ் கவிஞர் பெருமன்றத்திற்கு 1966 இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனது கவிதை பணியில் அனைவரையும் கவர்ந்து பல கவிதை நூல்களையும் எழுதி வெளியிட்டார், சுரதா எழுதிய தேன்மழை என்னும் கவிதை நூல் 1969 ல் தமிழக அரசின் பரிசு பெற்றது, இதை தொடர்ந்து தமிழக அரசு சுரதாவிற்கு 1972 ஆம் ஆண்டு கலைமாமணி விருதும், 1978 மற்றும்1990 ஆம் ஆண்டு இரண்டு முறை பாவேந்தர் பாரதிதாசன் விருதும் வழங்கி சிறப்பித்தது. மேலும் சுரதா அவர்களின் மறைவிற்கு பின்னர் அவரின் நூல்களை தமிழக அரசு நாட்டுடமையாக்கியது.

பின்னர் 2008 ஆம் ஆண்டு தமிழக அரசால் மரபு கவிஞர் சுரதாவிற்க்கு திரு உறுவ சிலை நிறுவி அவரையும் அவர் படைப்புகளையும் போற்றி பெருமை படுத்தியது. தமிழ் இலக்கிய உலகில் ஒரு கவிஞராகவும், எழுத்தாளராகவும் மிகபெரும் இலக்கியவாதியாகவும் போற்றபட்டு வலம்வந்து

“பிறந்தோம் என்பது முகவுரையாம் 
பேசினோம் என்பது தாய்மொழியாம்
மறந்தோம் என்பது நித்திரையாம்
மரணம் என்பது முடிவுரையாம்”

இப்படி உவமை நிலையாமையைச் சொன்ன உவமை கவிஞர் சுரதா ஜூலை 20, 2006 ஆம் ஆண்டு தனது 84 வது வயதில் சென்னையில் காலமானார்.

தமிழ் பற்று, இலக்கிய ஆற்றல் என பிரமிக்க வைக்கும் அவரின் கவிதை வரிகள் இன்றும் நமக்கு ஒரு புத்துணர்ச்சியே, தமிழின் அழகிலும் மொழியின் குலவியிலும் அவர் தொகுத்த வரிகளிலும் நாம் இன்னும் அவரை காட்சிபடுத்திக் கொண்டுதான் இருக்கிறோம் !.

– எம்.ஜாபர் சாதிக்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of