அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார்..? – விரைவில் அறிவிப்பு..!

189

அதிமுக வி்ன் முதலமைச்சர்  வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்கிறது என்றும் தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக – வின் தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது இந்தக்கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் மற்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தக்கூட்டத்தில் அதிமுக-வின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமைச்சர் தெரிவிக்கும் கருத்துகள், மற்றும் பாஜக-வின் இரண்டாம் நிலை தலைவர்கள் அதிமுக பற்றி தெரிவிக்கும் கருத்துகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.

பா.ஜ.க. கூட்டணி குறித்து வி.பி.துரைசாமி எழுப்பும் கேள்விக்கு தாங்கள் பதில் கூறவேண்டிய அவசியமில்லை என்று கூறிய அவர், அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது என்று முருகன் தெரிவித்திருப்பதாக கூறினார்.முதலமைச்சர் வேட்பாளர் குறித்து  உரிய நேரத்தில் அறிவிப்போம் என்றும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

Advertisement