2021 ஆம் ஆண்டு IPL தொடரில் CSK அணியின் கேப்டன் யார்..? CSK சிஇஓ பேட்டி

1348

வைரஸ், லாக்டவுன், வேலையின்மை என்ற கவலைகள் அனைவருக்கும் இருந்தாலும், கிரிக்கெட் ரசிகர்களுக்கென ஒரு தனிகவலை.. அப்படி என்ன கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு தனி கவலை..
ஐபில் கிரிகெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல தொல்விகளை சந்தித்து வருவதால் csk ரசிகள் வருத்தத்தில் உள்ளனர்.

அதிலும் தல டோனியின் அதிரடி விளையாட்டை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த வருடம் ஏமாற்றமாக அமைந்துள்ளது. தல டோனியின் ஆட்டம் சிறப்பாக இல்லாவிட்டாலும், மற்ற வீரர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இதனால் ரசிகர்கள் அடுத்த வருடம் சிறப்பாக சிஎஸ்கே அணி சிறப்பாக விளையாடும் என்று தங்களது மனைத மாற்றி கொண்டனர்.

ஆனால் சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு அடுத்த வருடம் தல டோனி விளையாடுவார என பலரது கேள்விகளாக இருந்தது. அந்த கேள்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், ஆங்கில நாளிதழுக்கு பதிலளித்துள்ளார். அதில் அவர் சொன்ன பதில் என்னவென்றால் 2021 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டோனி வழிநடத்துவார் என நான் நிச்சயமாக நம்புகிறேன்.

எங்களுக்கு மூன்று முறை கோப்பைகளை வென்று தந்திருக்கிறார். எந்த அணியும் செய்யாத சாதனையாக அனைத்து ஐபிஎல் தொடரிலும் பிளே ஆப் சுற்றுக்கு இதுவரை தகுதி பெற்றுள்ளோம்.

ஒரு மோசமான ஆண்டு அமைந்துவிட்டால், நாம் அனைத்தையும் மாற்ற வேண்டும் என்று அர்த்தம் இல்லை, எங்கள் திறமைக்கு தகுந்தபடி நடப்பு தொடரில் நாங்கள் விளையாடவில்லை, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் விலகியது அணிக்கு பின்னடைவு ஏற்படுத்தியது என்ற பதிலை கூறினார்.

இவர் சொன்ன பதிலை பார்த்த தல டோனி அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியை தாங்குவார், அதில் சுரேஷ்ரெய்னா, ஹர்பஜன் சிங் என்ற பல முக்கிய வீரர்கள் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

Advertisement