Who is the King of IPL? Google சொன்ன தகவல்? யாரா இருக்கும்?

1350

2008- ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மூலம் ஐபிஎல் என்ற கிரிக்கெட் தொடர் கொண்டு வரப்பட்டது. இந்த தொடரில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பல்வேறு அணிகள் உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் உள்ள அணிகளுக்கு அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் ரசிகர்களாக உள்ளனர்.

ஆனால் ஒரு அணிக்கு மட்டும் உலகில் உள்ள பல்வேறு நபர்கள் ரசிகர்களாக உள்ளனர். அதற்கு ஒரே காரணம் தல டோனி. அவர் வந்தால் அரங்கம் அதிரும் அவர் மைதானத்திற்குள் நின்றால் பவுலரின் கைகள் தினரும். இந்த ஒப்பற்ற மனிதனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள்  உள்ளார்கள் என்றால் அது மிகையல்ல.

உணவு தண்ணீர் எல்லாம் வேண்டாம் உன் ஆட்டம் பார்த்தால் போதும் தலைவா என்று அவரது ரசிகர்கள் கவிதையும் பாடுவார்கள் போல. இவர் விளையாடும் ஒவ்வொரு ஆட்டமும் விருவிருப்பான படத்தின் இறுதிகாட்சியையும் வென்று விடும் நீங்கமுடியாத பசுமரத்தானியாய் மனதில் நின்று விடும்.

இந்த கிரிக்கெட் ஹீரோவுக்கு இன்னும் பெருமை சேர்க்கும் விதமாக கூகுளில் ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது. அது என்னவென்றால் கூகுள் search box-ல் who is the king of IPL– என்று டைப் செய்தால் தல டோனியின் பெயர் வருகிறது. இதனை கண்ட அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of