Mass Hero in Universe? Google சொன்ன தகவல்!

987

திரைத்துறையில் உள்ளவர்கள் அனைவரும் கஷ்டப்பட்டு தான் ஒரு உச்சத்தை அடைகின்றனர். அதில் ஒரு சிலருக்கு அவர்களின் குடும்ப அடையாளத்தை வைத்து, வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

ஒரு சிலர் தங்களின் தேடல்களை வைத்து சினிமாவில் வாய்ப்பை பெறுகின்றனர். அவ்வாறு சினிமாவில் யாருடைய  பக்க பலமும் இல்லாமல் உச்சநடிகராக இருப்பவர்கள், ரஜினி, அஜித், விக்ரம், விஜய்சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன்.

இதில் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சியின் போட்டியாளராக இருந்து படிப்படியாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர். திரைத்துறையில் உள்ளவர்கள் ஹீரோவாகிய பின்பு தான், ரசிகர் பட்டாளத்தை சேர்ப்பார்கள்.

ஆனால் சிவகார்த்திகேயன் தான் போட்டியாளனாக இருக்கும் போதே ரசிகர்களை சேர்த்துக்கொண்டு சினிமாவிற்குள் வந்தவர். இந்நிலையில் யார் இந்த யுனிவர்ஸின் மாஸ் ஹீரோ என்று கூகுளில் டைப் செய்தால், நடிகர் சிவகார்த்திகேயனின் பெயர் வருகிறது. இதனை கண்ட அவரது ரசிகர்கள் வீடியோ எடுத்து அதை இணையதளங்களில் பரப்பி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of