அடுத்த முதலமைச்சர் யார்..? செல்லூர் ராஜூவின் பதில்

470

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை, சட்டமன்றத்தேர்தலுக்குப்பிறகு கூடும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில்தான் தேர்ந்தெடுப்பார்கள் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை அருகே பரவையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, 2021 ஆம்ஆண்டு நடைபெற் உள்ள சட்டமன்றத்தேர்தலை நோக்கி அதிமுக நிர்வாகிகள் புயல் வேகத்தில் பணியாற்றிக்கொண்டிருப்பதாக கூறினார்.

இ.பி.எஸ். – ஓ.பி.எஸ்.தலைமையில் அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையுடன் தேர்தல்பணியாற்றிவருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுகவை இரு தலைவர்கள் வழிநடத்துவதால், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி யாரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ, அவரே அடுத்த முதல்வர் என்று பதிலளித்துள்ளார்.

அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குப்பிறகு எம்.எல்.ஏக்கள் ஒன்றுகூடி முதலமைச்சரை தேர்ந்தெடுப்பார்கள் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.