குண்டும், குழியுமான சாலைகளை மக்களா பராமரிக்க முடியும்??

597

குண்டும், குழியுமான சாலைகளை மக்களா பராமரிக்க முடியும் என்று மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சாலை விபத்துகள் தொடர்பான வழக்கு நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த ஆண்டு, குண்டும், குழியுமான சாலைகளால் ஏற்பட்ட விபத்துகளில் 3 ஆயிரத்து 597 பேர் உயிரிழந்ததாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் புள்ளி விவரத்தை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இந்த புள்ளி விவரம் குறித்து சில மாநிலங்கள் சர்ச்சையை எழுப்புவது துரதிருஷ்டவசமானது என்றும் கூறினர். சாலைகளை பராமரிக்க முடியவில்லை என்று மாநிலங்கள் எப்படி சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சாலைகளை மக்களா பராமரிக்க முடியும்? என்றும் வினவினர். சாலைகளை பராமரிக்க முடியாத மாநிலங்கள், அனைத்து சாலைகளையும் அகற்ற போகிறார்களா? என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

Advertisement