தடுப்பூசி யாருக்கு போடலாம்..? யாருக்கு போடக்கூடாது..? முக்கிய தகவல்..!

1478

பெருந்தொற்று தடுப்பூசி யாருக்கு போடலாம், யாருக்கு போடக்கூடாது என்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட வேண்டும். கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் பெண்கள் தடுப்பூசி போடக்கூடாது. பெருந்தொற்று அறிகுறி உள்ளவர்கள், பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்கள் போடக்கூடாது.

நோயினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கும் தடுப்பூசி போடக்கூடாது. முதல் டோஸ் போட்டுக் கொள்ளும் நபருக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் அவர்களுக்கு 2-வது டோஸ் போடக்கூடாது. 14 நாட்கள் இடைவெளி அடிப்படையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களை பிரிக்க வேண்டும்.

முதல் டோஸில் எந்த தடுப்பூசி வழங்கப்பட்டதோ, அதே மருந்தைதான் இரண்டாவது டோஸாக வழங்க வேண்டும். தடுப்பூசியை மாற்றி போடக்கூடாது. ரத்தப்போக்கு அல்லது ரத்த உறைதல் பிரச்சனை உள்ளவர்களுக்கு தடுப்பூசியை எச்சரிக்கையுடன் வழங்க வேண்டும்.

ஆர்.டி.பி.சி.ஆர் பாசிடிவ் கொண்டவர்கள், நாட்பட்ட நோய்கள், நோயெதிர்ப்பு பாதுகாப்பு, எச்.ஐ.வி பாதிப்பு கொண்டவர்களுக்கு தடுப்பூசியை கவனமாக கொடுக்க வேண்டும். கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு என்று பிரத்யேகமாக தனித்தனி வழிக்காட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement