கொரோனா வைரஸ் : இது ஒன்றே தீர்வு – WHO

1116

ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில், நடைபெற்ற, அவசரக்கால குழுக் கூட்டத்தில் தலைவர் டெட்ரோஸ் அதனோம் பேசினார்.

கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதையும் பாதித்துள்ளது என்றும் இதுபோன்ற ஒரு கொள்ளை நோய் உலகில் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் உலகைத் தாக்கும் எனவும் தெரிவித்தார்.

இதன் பாதிப்புகளை உலகம் இன்னும் பல  ஆண்டுகளுக்கு உணரும் என்று கூறிய அவர், கொரோனா நோய்த்தொற்று குறித்த அறிவியல் ரீதியிலான பல கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியவில்லை என்றும் பல புதிர்கள் இன்னும் விடுவிக்கப்படாமலேயே இருப்பதாக தெரிவித்தார்.

நன்கு செயல்படக் கூடிய கொரோனா தடுப்பு மருந்து கண்டறியப்படுவதே அந்த நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழியாக இருக்கும் என்று டெட்ரோஸ் அதனோம் குறிப்பிட்டார்.

Advertisement