ரஷ்யாவின் தடுப்பூசி குறித்து WHO கருத்து

854

உலகின் முதல் தடுப்பூசியை பதிவு செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில், கடுமையான ஆய்வு தேவை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகத்தை கலக்கி வரும் வைரஸூக்கான தடுப்பூசி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டதாக ரஷ்யா நேற்று அறிவித்தது. SPUTNIK – V என பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பூசி மிகவும் திறம்பட செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரஷ்யாவின் தடுப்பூசி குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பு, பாதுகாப்பு ஆய்வுகளை மிகக்கடுமையாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளது.

எந்த ஒரு தடுப்பூசிக்கும் முன் தகுதி அளிப்பது என்பது தேவையான பாதுகாப்பு மற்றும் திறன் அம்சங்களை கடுமையாக மதிப்பாய்வு செய்த பின்னரே இருக்கும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement