“ஊரடங்கு உத்தரவை தளர்த்தினால்..” – WHO எச்சரிக்கை

1097

ஊரடங்கு உத்தரவை தளர்ப்பதன் மூலம், கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மனித குலத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த, உலக நாடுகள் போராடி வருகின்றன. வைரஸ் பரவலை தடுக்க, பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன.

சில நாடுகள் ஊரடங்கை நீக்குவது குறித்து பரிசீலித்து வருகின்றன. இந்தநிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த  உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தீவிரம் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

கடந்த ஒரு வாரத்தில், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸில் குறைந்த எண்ணிக்கையிலேயே புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவை நீக்க வேண்டும் என்பதே உலக சுகாதார அமைப்பின் விருப்பம் என கூறிய

டெட்ரோஸ் அதானோம்,  போதிய ஆலோசனை இன்றி, ஊரடங்கு உத்தரவை தளர்ப்பதன் மூலம், கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

Advertisement