அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாட பாஜகவிற்கு என்ன உரிமை உள்ளது? – மாயாவதி கேள்வி

677

உத்திரப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அமித் ஷா, தேர்தல் நேரத்தில் மட்டுமே மாயாவதிக்கு அம்பேத்கர் நினைவில் வருவார் என்றும், ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு, அவர் தனது சிலைகளை மட்டுமே அமைப்பார் எனவும் தெரிவித்தார்.

ஆனால் பாஜக அம்பேத்கருக்கு நினைவு மண்டபம் கட்டியிருப்பதாகவும், தலித்களுக்கு எண்ணற்ற நலத்திடங்களை செய்திருப்பதாகவும் அமித் ஷா கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அமித்ஷாவின் கருத்துக்கு பதிலளித்துள்ளார்.

அவர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் பேசிய போது “ பகுஜன் சமாஜ் கட்சி மட்டும் தான் அனைத்து மக்களுக்கு நன்மைகளை செய்து வருகிறது.

பாஜக அம்பேத்கரை உண்மையாக மதிப்பதாக இருந்தால் எந்த நிலையிலும் அவரை பின் தொடர்பவர்களை தொந்தரவு செய்யக்கூடாது.

அதுமட்டுமல்ல தலித்களை முற்றிலும் அழித்த பாஜகவுக்கு அவரின் பிறந்த நாளை கொண்டாட என்ன உரிமை உள்ளது” என்று கடுமையாக சாடினார்.

Advertisement