ரிஷப் பந்த் அல்லது ஷ்ரேயாஸ் அய்யர் இதில் யாரை தேர்ந்தெடுக்கலாம்? உங்கள் ஓட்டு யாருக்கு?

500

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று விளையாடும் இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் இடம் பெற்றிருந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்தினார். நாளை மறுநாள் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும் நிலையில் ஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்டது. காயம் குறித்து பரிசோதித்த இந்திய அணி மருத்துவ குழு 3 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

இதனையடுத்து தவான் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.இது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பந்த் அல்லது ஷ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பந்த் அல்லது ஷ்ரேயாஸ் அய்யர் இரண்டு வீரர்களில் யாரை தேர்ந்தெடுக்கலாம்? என்பதனை பற்றிய உங்களுடைய கருத்துகள் மற்றும் வாக்குகளை சத்தியம் தொலைக்காட்சி முகநூல் பக்கத்தில் பதிவிடலாம்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of