வட சென்னை யாருக்கு ? – திமுக – தேமுதிக நேரடி போட்டியா? – சிறப்பு தொகுப்பு

917

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக திமுக பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.

அதிமுக கடந்த தேர்தலில் தனித்து களம் கண்டு தமிழகத்தில் 39 க்கு 37 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது.

ஆனால் இம்முறை பாஜக-பாமக – தேமுதிக என கூட்டணி கட்சிகளொடு களமிறங்குகிறது.

திமுகவும் காங்கிரஸ் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி வைத்து களமிறங்குகிறது.

கருணாநிதி, ஜெயலலிதா என இரண்டு ஆளுமைகள் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் இரு கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர்.

இதில் கடந்த கால மக்களவை தேர்தல் வெற்றியும்,தோல்வியும் வட சென்னையில் தற்போதைய வாய்ப்பு யாருக்கு என்பது குறித்து பார்ப்போம்.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற 14 ஆவது மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட செ.குப்புசாமி வெற்றி பெற்றார். இதில் செ. குப்புசாமி – திமுக – 5,70,122 வாக்குகள் பெற்றார்.
சுகுமார் நம்பியார் – பாஜக – 3,16,583 வாக்குகள் பெற்றார்.
இதில் வெற்றி வித்தியாசம் – 2,53,539 வாக்குகளாக இருந்தது.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற 15 வது மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார். இதில் 
 டி.கே.எஸ். இளங்கோவன் – 2,81,055 வாக்குகள் பெற்றார். இரண்டாம் இடத்தில் 
சிபிஐ தா. பாண்டியன் 2,61,902 வாக்குகள் பெற்றார். 

இதில் வெற்றி வித்தியாசம்  19,153 வாக்குகளாக இருந்தது.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற 16 வது மக்களவைத் தேர்தலில் வட சென்னை வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 14,22,001 ஆக இருந்தது. 

16 ஆவது மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு அபார வெற்றி பெற்றார்.  இதில் டி.ஜி.வெங்கடேஷ் பாபு  4,06,704 வாக்குகள் பெற்றிருந்தார். இரண்டாம் இடத்தில் இருந்த ஆர்.கிரிராஜன் திமுக 3,07,000 வாக்குகள் பெற்றிருந்தார்.  இதில் வாக்கு வித்தியாசம் 99, 704 ஆக இருந்தது.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேமுதிக சார்பில் வட சென்னை தொகுதியில் யுவராஜ் நிறுத்தப்பட்டு 66,375 வாக்குகள் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடுகிறது.

இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆற்காடு வீரசாமி மகன் கலாநிதி வீராசாமி போட்டியிடுவதால் திமுக விற்கு வெற்றி வாய்ப்பு 

திமுக பொருளாளராக 1994 முதல் 2008 வரை பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் ஆற்காடு வீராசாமி உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் கட்சி பணிகளிலிருந்து பெரிய அளவில் ஈடுபடாமல் ஒதுங்கியிருக்கிறார். 

இதனால் அந்த இடத்தை தற்போது அவரது மகன் கலா நிதி வீராசாமி நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவிலிருந்து பிரிந்த டிடிவி தினகரன் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளர் போட்டியிடுவதன் மூலம் அதிமுக வின் ஓட்டுக்கள் அமமுக விற்கு சரிபாதியாக வருவதற்கு வாய்ப்புகள் இருப்பினும் வெற்றி வாய்ப்பு திமுக-வின் பக்கம் இருப்பதாக கள நிலவரம் தெரிவிக்கிறது.

இருந்தபோதிலும் அமமுக வேட்பாளர் திமுக வேட்பாளருக்கு நெருக்கடி கொடுப்பார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of