காவலாளியின் தடியை கண்டு பயமா ? மோடியை புகழ்ந்து தள்ளிய “மோடி”

337

பிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம்.நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.

இந்த படம் நடைபெற உள்ள தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு சாதமாக அமையும் என்று குறிப்பிடப்பட்டு, தேர்தல் நேரத்தில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் மனு அளித்து உள்ளது.

அதில் “இந்த படத்தை வெளியிட அனுமதிப்பது தேர்தல் விதிமீறல் ஆகும்” என்று கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து மோடி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இது குறித்து தற்போது இந்த படத்தில் பிரதமர் மோடியாக நடித்திருக்கும் விவேக் ஒபராய் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை ஏன் இந்த அளவு சிலர் எதிர்க்கின்றனர்? என புரியவில்லை. மூத்த மற்றும் பிரபல வக்கீல்களான அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோர் இது போன்ற சாதாரண படத்திற்கு தடை கோரி மனு அளித்ததும் ஏன்? என தெரியவில்லை. இவர்கள் மோடியின் படத்திற்கு பயப்படுகிறார்களா?அல்லது காவலாளியின் தடியை கண்டு பயப்படுகிறார்களா?

படத்தில் மோடியை மிகைப்படுத்தி காட்டப்படவில்லை. மேலும் அவரை ஒரு ஹீரோவாகவும் காட்டவில்லை. அவர் எனக்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அத்தனை கோடி மக்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் ஹீரோ ஆவார். திரைக்கு வரவிருக்கும் மோடியின் வாழ்க்கை குறித்த இந்த படம் மக்களை ஊக்குவிக்கும் படமாகும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of