நான் ஏன் மகாத்மா?

1795

நான் ஏன் மகாத்மா?

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளில், நான் ஏன் மகாத்மா என்று அனைவராலும் போற்றப்படுகிறேன் என்று காந்தியடிகளே விளக்கும் செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்..

நான் ஏன் மகாத்மா என்று அழைக்கப்படுகிறேன் என்று பல நேரங்களில் எண்ணிப்பார்த்ததுண்டு, சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் இருந்தே மக்கள் என்னை அவ்வாறுதான் அழைத்தார்கள்..இது ஏன் என்று எனக்கு தோன்றும் போதெல்லாம் சில சம்பவங்கள் நினைவுக்கு வரும் அவற்றில் சிலவற்றை நினைவு கூற விரும்புகிறேன்.

தென் ஆப்பிரிக்காவில் நான் வழக்கறிஞர் தொழில் செய்துகொண்டு இருந்த போது ஒரு நாள் புகைவண்டியில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்தேன்…அப்போது நடுவில் ஒரு ரயில் நிறுத்தத்தில் ஏறிய ஒரு வெள்ளைக்காரர், என்னிடம்

ஒழுங்கான பயணச்சீட்டு இருந்தபோதும் நான் கறுப்பர் என்பதால் இறங்கச் சொன்னார். நான் மறுக்க, அந்த வெள்ளைக்காரர் பயணச்சீட்டு பரிசோதகருடன் சேர்ந்து என்னை உடைமைகளுடன் அந்த பெட்டியிலிருந்து தூக்கி வெளியே வீசினார்.

அப்போது பிளாட்பாரத்தில் விழுந்த நான் பல மணி நேரங்களுக்கு அங்கிருந்து எழுந்திருக்கவே இல்லை. “எனக்கு இது ஏன் நடந்தது? நானும் முதல் வகுப்பு டிக்கெட் வைத்திருந்தேன், பிறகு நான் ஏன் தூக்கி எறியப்பட்டேன்? இதற்கு வழி காண வேண்டும்” என்று அன்று முதல் மக்களின் பெரிய பிரச்சனைகளுடன் தன்னை தானே நான் அடையாளப்படுத்திக் கொள்ள எண்ணினேன்…

சிறிய அடையாளங்களைத் தகர்த்தெறிந்து மிகப் பெரிய அடையாளங்களுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள நினைத்தேன்…அன்றிலிருந்தே ஏதோ ஒரு வேட்கை என்னுள் எழ ஆரம்பித்தது..

அதே போல எனது திருமணத்திற்கு பிறகு

விவசாய வேலை செய்யும் பெண்கள் தினசரி குளித்து, சுத்தமான ஆடை உடுத்தினால் சுகாதாரமாக இருக்கலாம் என்பதை தனது மனைவி கஸ்தூரிபாய் மூலம் கிராமப் பெண்களுக்கு அறிவுறுத்தச் சொன்னேன்..

அப்படி ஒருநாள் கஸ்தூரிபாய் பெண்களிடம் சென்று பேசிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒரு பெண் கேட்டார், “என் வீட்டை நன்றாகப் பாருங்கள், இங்கு ஆடைகள் வைப்பதற்கான அலமாரியோ அல்லது சூட்கேஸ் எதாவது தென்படுகிறதா? உடுத்தியிருக்கும் இந்த ஒரே புடவைதான் என்னிடம் இருக்கிறது.

இதை நான் துவைத்தால், அது உலரும்வரை எதை உடுத்துவேன்? முதலில் காந்தியிடம் சொல்லி எனக்கு இன்னொரு சேலை வாங்கிக்கொடுங்கள். பிறகு நான் தினமும் குளித்து சுத்தமான ஆடை உடுத்துகிறேன்.”

இதைக்கேட்ட நான், எனது ஒரு மேல்துண்டை கொடுத்து அந்த பெண்ணிடம் கொடுக்ச் சொன்னேன். அதன்பிறகு நான் மேல்துண்டு அணியும் பழக்கத்தையே கைவிட்டுவிட்டேன்…

1918இல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் போராட்டத்தில் பங்கேற்க சென்றபோது தலைப்பாகை அணிந்துதான் சென்றேன்.. மேலாடை இன்றி தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு இருந்ததை பார்த்த நான்..

தலைப்பாகைக்கு பயன்படுத்தப்படும் துணியில் குறைந்தது நான்கு பேரின் உடலை மறைக்கமுடியும் என்பதை தெரிந்துக் கொண்டேன், அன்றிலிருந்து தலைப்பாகை அணிவதை கைவிட்டேன்…

பருத்தி சாகுபடி தொடர்பாக விவசாயிகளுக்கு யாரும் நெருக்கடி கொடுக்கக்கூடாது என்பதற்காக, 1920, ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று விவசாயிகளின் சத்யாகிரகத்தில் பங்கேற்றேன், அப்போது கைத்தறி தொடர்பாக ஒரு சபதம் மேற்கொண்டேன்.

மான்ச்செஸ்டர் தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக இந்திய விவசாயிகள் பருத்தி விளைவிக்க கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.அன்று  முதல் என் வாழ்க்கையில் எப்போதும் கைத்தறி ஆடைகளையே உடுத்துவேன் என்று நான் சபதம் எடுத்தேன்.. அதுமட்டுமல்ல …

மேல்நாட்டில் சட்டப் படிப்பு பயின்ற நான் 1888ம் ஆண்டுகளில் கோட்-சூட் என வெளிநாட்டினரின் உடைகளை அணியும் பழக்கத்தை கொண்டிருந்தேன். 1921இல் நான் சென்னையில் இருந்து மதுரைக்கு ரயிலில் பயணித்தேன். அப்போது

“ரயில் பயணிகளில் பலர் வெளிநாட்டு மில் துணியால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்தனர். கைத்தறி ஆடை அணியுமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தேன்.

அதற்கு தலையசைத்து மறுப்பு தெரிவித்த அவர்கள், கைத்தறி துணி வாங்கும் அளவுக்கு வசதியில்லை என்று சொன்னார்கள்” “இந்த கூற்றுக்கு பின்புலமாக இருந்த அடிப்படை உண்மைகளை நான் உணர்ந்தேன்.

நான், வேட்டி, மேலாடை, தலைப்பாகை, அங்கவஸ்திரம் என பல ஆடைகளை அணிந்திருந்தேன். லட்சக்கணக்கான மக்கள் உடலை மறைக்க நான்கு முழத் துணிகூட இல்லாமல் இருக்கும்போது, நான் இவ்வளவு ஆடைகளை அணிந்திருந்தது சரியா என்ற கேள்வி என்னுள் எழும்பியது”

மதுரையில் நடந்த அந்த கூட்டத்திற்கு அடுத்த நாளில் இருந்து நான் இடுப்பில் வேட்டியும், தோளில் துண்டும் அணியத்தொடங்கி அவர்களுள் ஒருவராக மாறினேன்.”

இடையில் சிறு வேட்டியும் தோளில் துண்டும் அன்னிய ஆடைகளை விலக்கும் சத்தியாகிரக போராட்டத்தின் ஓர் அடையாளச் சின்னமாக மாறியது.

அது என்னை ஏழை மக்களுக்கு மேலும் நெருக்கமானவராக்கிவிட்டது. இது போன்று பல நிகழ்வுகள் உண்டு ஆனால் அவற்றை விளக்க இந்த நிமிடங்கள் போதாது.

சுதந்திரத்திற்காக வெள்ளையர்களிடம் நான் நடத்திய போராட்டங்கள்,நாட்டின் ஏழை மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்திருப்பதால்தான் எனது 150வது பிறந்தநாளின் போது கூட மகாத்மா என்று போற்றப்படுகிறேன் என்று நினைக்கிறேன்..

நாட்டின் சுதந்திரத்திற்காக ஏராளமானோர் பாடுபட்டிருந்தாலும் என்னை மட்டும் ஏன் மகாத்மா என்று அழைக்கிறார்கள் என்று நான் பலமுறை எண்ணியதுண்டு..அவ்வாறு அழைக்கவேண்டும் என்று நான் நினைத்ததும் இல்லை..ஆனால் அவ்வாறு அழைக்கும் மக்களின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு என்னை முழுமையாக மாற்றிக்கொண்டேன்.

முழுமையாக மாற்றிக்கொண்டேனா என்று கூட தெரியவில்லை ஆனால் முயற்சி செய்திருக்கிறேன்..வாழ்வில் சிலவற்றை துறந்தால்தான் சிலவற்றை அடைய முடியும்..அவ்வாறு நான் துறந்தது இந்தியாவின் ஏழை மக்களுக்காகவும் என் இந்திய தேசத்திற்காகவும் என்பதில் பெருமை கொள்கிறேன்..

அதனால் தான் என்னவோ என்னை மகாத்மா என்று இன்றளவும் அழைக்கிறார்கள்..

Advertisement