சுத்தமாக இல்லையென்றாலும் வெடிக்குமா..? செல்போன்கள் வெடிப்பதற்கான காரணங்கள்! சிறு தொகுப்பு!

1153

முன்னுரை:-

இன்றைய நாட்களில் செல்போன்களின் வளர்ச்சி அபாரமாக இருந்து வருகிறது. இந்த செல்போன்கள் மனிதனின் ஒரு உறுப்பாக மாறும் அளவிற்கு, அதன் பங்கெடுப்பு மனித வாழ்வில் உள்ளது.

இப்படி பட்ட செல்போன்கள் சில நேரங்களில் வெடித்து பயங்கர விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த விபத்துக்களில் சிலர் இறந்தும் விடுகின்றனர். இதுபோன்ற விபத்துக்கள் இன்றைய காலக்கட்டத்தில் அதிகமாக நடந்து வருகின்றன.

செல்போன்கள் ஏன் வெடிக்கின்றன..? அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி..? இந்த வினாக்களுக்கு விடையளிக்கிறது, இந்த கட்டூரை..,

ஏன் செல்போன்கள் வெடிக்கின்றன..,?

செல்போனை சார்ஜ் செய்யும்போது அதனுள் மின்சாரம் ஏற்றப்படுவதன் காரணமாக அது சூடாகும். பேட்டரி சார்ஜ் ஆன பிறகும் மின் இணைப்பில் இருக்கும்போது, வெளியாகும் மின்சாரத்தை பேட்டரி தாங்காது என்பதோடு, அது வெடிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.

அதிகப்படியான வெப்பங்கள் செல்போன்களில் இருந்து வெளியோறாமல் இருக்கும் போது, செல்போன்கள் வெடிக்கும் வாய்ப்பும் உள்ளது.

மேலும், செல்போன்கள் தயாரிக்கும் போது ஏற்படும் சிறுசிறு தவறுகளினாலும் செல்போன்கள் வெடிக்கும் அபாயம் உள்ளது.

தற்போது செல்போன் வெடிப்பதற்கான காரணங்கள் குறித்து காண்போம்..,

சீப்பான சார்ஜர்ஸ்..,

சீப்பான சார்ஜர்ஸ் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். தற்போது வருகின்ற அட்வான்ஸ் சார்ஜர்களில், ஒரு செல்போனிற்கு எவ்வளவு எலக்ட்ரிசிட்டி வழங்க வேண்டும் என்பது குறித்து, அதில் புரோகிராம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் மூன்றாம் தர சார்ஜர்களில் அதுபோன்ற சிறப்பம்சங்கள் இல்லை. இதனால் செல்போன்களுக்கு அதிக எலக்ட்ரிசிட்டி அளிக்கப்பட்டு, செல்போன்கள் வெடிக்கப்படலாம்.

சீப்பான சர்வீஸ்..,

நம் செல்போன்களில் செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு அம்சமும் முக்கியமான ஒன்று. அதில் சிறு மாற்றங்கள் செய்யும் போது, பேட்டரியில் சில மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

நம் போன்கள் சோதம் அடையும் போது, வீட்டுப்பக்கத்தில் இருக்கும் சில சீப்பான சர்வீஸ் சென்டர்களில் செல்போன்களை சர்வீஸ் செய்வோம். அப்போது அவர்கள் செய்யும் சிறு மாற்றத்தாலும் கூட செல்போன்கள் வெடிக்கலாம்.

செல்போன்களை அழகுப்படுத்தும் சீப்பான மோடிபிகேசன் பொருட்கள்..,

பொதுவாக செல்போன்கள் வெடிப்பதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது, அந்த செல்போனில் ஏற்படும் அதிகப்படியான வெப்பம் தான். இதனால் செல்போன் நிறுவனங்கள் அந்த வெப்பம் வெளியேற்றுவதற்காக சில துவாரங்களை வைத்திருப்பர்.

ஆனால் நாம் சில மூன்றாம் தர செல்போன் அழங்காரப் பொருட்களை கொண்டு, அழகுப்படுத்தும்போது, அந்த துவாரங்கள் மூடிக்கொண்டு வெப்பம் வெளியோறாமல் செல்போன்கள் வெடித்து சிதறும் அபாயம் அதிகமாக உள்ளது.

செல்போன்களை பராமரித்தல்..,

செல்போன்களை சுத்தமாக வைத்திருக்காவிட்டாலும், செல்போன்கள் வெடித்து சிதறும் அபாயம் இருக்கின்றன. ஏனென்றால், செல்போன்கள் பெரும்பாலும் நம் கையிலும், உடலிலும் அதிக நேரம் வைக்கப்படுகின்றன.

இதனால், நம் கைகளில் இருக்கும் அழுக்குகள், அந்த செல்போன்களில் இருக்கும் துவாரங்களில் தங்கி விடுகின்றன. இதனால் அந்த செல்போன்களில் இருந்து வெப்பம் வெளியோறாமல் செல்போன்கள் வெடிக்கின்றன.

முடிவுரை:-

மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களை தவிர்த்து வந்தலே பெரும்பாலும் செல்போன் வெடிப்புகளை தவிர்க்கலாம்…,

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of