தோனியை 7-வதாக களமிறக்கியது ஏன்? – ரவி சாஸ்திரிக்கு பிசிசிஐ கிடுக்குப்பிடி..!

788

நியூசிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் தோனியை 7வதாக களமிறக்கியது ஏன் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் பிசிசிஐ விளக்கம் கேட்டுள்ளது.

உலக கோப்பை போட்டியில் அரையிறுதியின்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடியது. அப்போது இந்திய அணி தொடர் விக்கெட்டுகளை பறிகொடுத்து ரன்களை எடுக்க தடுமாறியது.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் தோனி 7 வதாக களமிறக்கப்பட்டார். களமிறங்கிய தோனியும் ஜடேஜாவும் அணியின் வெற்றிக்காக கடுமையாக பாடுபட்டனர். இருந்தும் தோனியின் ரன் அவுட் ஆனதால் இந்திய அணி வெற்றியடைவது சாத்தியமற்றதாக மாறியது.

இந்த நிலையில் தோனியை ஏன் முன்கூட்டியே களமிறக்கவில்லை என பிசிசிஐ ரவி சாஸ்திரியிடம் விளக்கம் கேட்டுள்ளது.

தோனி 7வதாக களமிறக்கப்பட்டதற்கு சச்சின்,கங்குலி,விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோர் கடுமையாக சாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of