எடியூரப்பா மீது மோடிக்கு என்ன கோபம்..? எடியூரப்பாவுக்கு உண்டான புது தலைவலி..?

734

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. திடீரென அந்த கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

இதனையடுத்து கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா ஆளுநரிடம் அழைப்பு விடுத்து ஆட்சி அமைத்தார். இதையடுத்து மத்திய அமைச்சர் அமித்ஷா அவருக்கும் தனது வாழ்த்துகளை டுவிட்டரில் தெரிவித்தார்.

இந்நிலையில் கர்நாடக பாஜக தொண்டர்களிடையே ஒரு கேள்வி எழுந்துள்ளது. அது என்னவென்றால், யார் முதலமைச்சராக பதவியேற்றாலும் வாழ்த்து தெரிவிக்கும் பிரதமர் மோடி, எடியூரப்பா பதவியேற்று ஒரு வாரம் ஆகியும், ஏன் வாழ்த்து தெரிவிக்காமல் இருக்கிறார் என்று தொண்டர்கள் கேள்வி எழுப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுமட்டுமின்றி, மந்திரி சபை நியமனத்தில் இழுபறி இருந்து வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இதே நிலை நேர்ந்தால் கர்நாடகத்தில் இருந்து வரும் நிலையற்ற அரசியல், நீடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of