மோடியை பாராளுமன்றத்தில் கட்டி பிடித்தது ஏன்? – மாணவி கேள்விக்கு ராகுலின் சுவாரஸ்ய பதில்

711

 

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை வந்த நிலையில் ஸ்டெல்லா மேரி கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் முன்னிலையில் உரையாற்றினார்.

அந்த உரையில், மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். ஜி.எஸ்.டி வரி விதிப்பால் சிறு குறு வணிகங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குறைவாகவும், அனைத்து பொருட்களுக்கும் சீரான வகையிலும் ஜி.எஸ்.டி வரிவிதிக்கப்படும் என கூறிய ராகுல் காந்தி, தன்னை போன்று பிரதமர் மோடி எத்தனை முறை மாணவிகளிடம் உரையாற்றியிருக்கிறார் என ராகுல் காந்தி கேள்வியெழுப்பினார்.

மேலும் ஒரு மாணவி, நீங்கள் ஏன் மோடியை பாராளுமன்றத்தில் கட்டிப்பிடித்தீர்கள் என கேட்ட கேள்விக்கு பதிலளித்த ராகுல், எல்லா விஷயத்திற்கும் அன்பு தான் அடித்தளம். இந்து,கிறிஸ்தவர்,முஸ்லிம் என யாராக இருந்தாலும் அன்பு செலுத்தவேண்டும் என பேசிய அவர், நான் அனைவரிடமும் அன்பு செலுத்துகிறேன்.

அந்த அடிப்படையில் பிரதமர் மீதான அன்பால் நான் அவரை கட்டித் தழுவினேன் என கூறினார்.

இந்த பதிலை கேட்ட மாணவிகள் ஆர்ப்பரித்து சப்தமிட அரங்கமே அதிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of