திமுக ஏன் பதறுகிறீர்கள்? – ஜெயக்குமார் சாடல்

523

அமமுக கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக கூறி அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவர் மீது அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக மனு அளித்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயகுமார், ‘3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதற்கு திமுக ஏன் பதறுகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஜனநாயக படுகொலைக்கு திமுகவினர் சொந்தக்காரர்கள் என்றும், எதுவாகினும் அதிமுக சட்டத்திற்கு உட்படுத்துதான் செயல்படும் என்றும் தெரிவித்தார்.

1972ல் எம்.ஜி.ஆர் கட்சி அமைத்தபோது திமுக கொடுத்த இடைஞ்சலும், 1989ஆம் ஆண்டு ஜெயலலிதாவை சட்டசபையில் அவமானப்படுத்தியும் ஜனநாயக படுகொலை செய்தது திமுக தான் என்பதை நாடே அறியும்.

மூன்று எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது திமுக பதறுவதை பார்த்தால் திமுகவின் ‘பி’ டீம்தான் இந்த மூன்று எம்.எல்.ஏக்கள் என்பது கண்கூடாக தெரிகிறது என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of