முகேஷ் அம்பானி வாங்கிய second hand கார்..! ஏன் தெரியுமா?

1219

இந்தியாவின் பணக்கார தொழில் அதிபர் முகேஷ் அம்பானி,  இது அனைவருக்கும் தெரிந்த  ஒன்று.

அவர் குடும்ப பயன்பாட்டிற்காக second hand கார் டெஸ்லா மாடல் எஸ் 100 டி வைத்திருக்கிறார். இது வெளிநாட்டில் உற்பத்தி செய்யும் கார் என்பதாலும், இதில் அநேக சிறப்பம்சங்கள் இருப்பதினாலும் கூட  இந்த காரை அவர் வைத்திருக்க கூடும்.இவ்வளவு பெரிய பணக்காரர் புதிய கார் வாங்கி இருக்கலாம் எதற்காக second hand கார் வைத்திருக்கிறார் என்று அனைவரும் யோசிக்க கூடிய ஒன்று தான். ஏன் இந்த கார் வாங்கினார் என்பதை பார்போம்..

சாதாரணமாக நம் தனிப்பட்ட முறையில் வெளிநாட்டு கார் இறக்குமதி செய்யப்பட்டால், முதலில் இறக்குமதி செய்யப்படும் அந்த நிறுவனத்தின் பெயரில் தான்  பதிவு செய்யப்பட்டு வரும்.

அதன் பின்பு மொத்த பணத்தை செலுத்திய பிறகு  தான் அந்த நபர்களின் பெயர் பதிவு செய்யப்படும்.  தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்யப்பட்டால் காரை நம்முடைய பெயருக்கு பதிவு செய்ய அதிக நேரம் செலவிட்டு பல இடங்களுக்கு அலைய வேண்டிய நிலை இருக்கும்.

எனவே நேரத்தையும் காலத்தையும் வீணாக்காமல் தனக்கு பிடித்த  டெஸ்லா மாடல் எஸ் 100 டி காரை  second hand-ல் வாங்கியிருக்கிறார் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி. தற்போது அனைவருக்கும் புரிந்து இருக்கும் ஏன் second hand-ல் கார்  வாங்கினார் என்பது.

இந்த கார் டெஸ்லா மாடல் எஸ் 100 டி தற்போது  “RELIANCE INDUSTRIES LTD” என்ற பெயரில் இரண்டாவது உரிமையாளர் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

Ambani 1

எதற்காக இந்த காரை வாங்கினார், இதன் சிறப்பம்சம் என்ன?

இந்த வாகனம் மின்சார மோட்டார்களால்  இயங்ககூடியது. இது 100 கிலோவாட் பேட்டரி கொண்டது. மேலும் இது வேகமான சார்ஜரைப் பயன்படுத்தி 396 கி.மீ தூரத்திற்கு செல்ல வெறும் 42 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதுமானது .

அமெரிக்காவில் இந்த கார் விலை 9 99,990 ஆகும்.  இது 73 லட்சம் ஆகும்.

இது இந்தியாவில் வாகனத்தை இறக்குமதி செய்தபின் 100% க்கும் அதிகமான இறக்குமதி வரியை செலுத்திய பிறகு ரூ .1.5 கோடி செலவாகும். பதிவு செலவு மற்றும் காப்பீடு இதில் இல்லை.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of