விளம்பரப்படங்களில் நடிக்காமல் இருப்பது ஏன்..? சாய் பல்லவி விளக்கம்..!

394

பிரேமம், மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலம் அடைந்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பலமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

பல்வேறு நடிகைகள் விளம்பரப்படங்களில் நடித்து வரும் நிலையில், நடிகை சாய் பல்லவி மட்டும் எந்தவித விளம்பர படங்களிலும் நடிக்காமல் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு கூட, அழகு சாதன பொருளின் விளம்பரப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும், அந்த விளம்பரத்தில் நடிக்க ரூபாய் 2 கோடி சம்பளம் என்று கூறப்பட்டது. ஆனால், அந்த வாய்ப்பை அவர் தட்டிக்கழித்தார். இந்நிலையில் விளம்பரப்படங்களில் தான் ஏன் நடிக்காமல் இருக்கிறேன் என்பது குறித்து நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, அந்த விளம்பரத்தில் நடித்திருந்தால் எனக்கு பெரிய அளவில் பணம் கிடைத்திருக்கும். அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன்.

வீட்டுக்கு சென்றால் 3 சப்பாத்தி அல்லது கொஞ்சம் சாதம் சாப்பிடுவேன். வேறு எந்த பெரிய தேவையும் எனக்கு இல்லை. என்னை சுற்றியிருப்பவர்களின் சந்தோஷத்துக்கு உதவ முடியுமா என்று பார்க்கிறேன், அவ்வளவுதான் என்று விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of