“ஐசக் நியூட்டனுக்கு பதிலாக ஐன்ஸ்டீன்.. இதனால தான் சொன்னேன்” – பியூஸ் கோயல்

440

இந்திய அளவிலான வர்த்தக வாரியத்தின் உயர்மட்ட கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தலைமை தாங்கினார். பின்னர் பியூஷ் கோயல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

‘பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடியாக உயர்த்தும் இலக்கை எட்டுவதை கணித பார்வையில் பார்க்கக்கூடாது. ஏனென்றால், புவிஈர்ப்பு விசையை கண்டுபிடிக்க ஐன்ஸ்டீனுக்கு கணிதம் உதவவில்லை’ என கூறினார்.

ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தார் என்பதற்கு பதிலாக ஐன்ஸ்டீன் என பியூஸ் கூறியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்த விவகாரம் குறித்து பியூஸ் கோயல் கூறுகையில், ‘டங்க் சிலிப் (நாக்கு குழறி) காரணமாக ஒரு தவறு அரங்கேறிவிட்டது. ஐசக் நியூட்டனுக்கு பதிலாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை கூறிவிட்டேன். நாம் அனைவரும் தவறு செய்யும் வாய்ப்பைப் பெறுகிறோம். தவறும் செய்து விடுகிறோம். என கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of