தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கீடு ஏன்..? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு..!

326

கொரோனா பாதிப்பில் 2ஆம் இடத்தில் இருக்கும் தமிழகத்திற்கு ஏன் அதிக நிதியை ஒதுக்கவில்லை என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டுமென ராஜேந்தர் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கொரோனா பாதிப்பில் தமிழகம் 2வது இடத்தில் இருக்கும்போது 510 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இது போதுமானதாக இருக்காது என தெரிவித்தனர்.

கொரோனா தொற்று குறைவாக உள்ள மாநிலங்களுக்கு அதிக தொகையை ஒதுக்கிய மத்திய அரசு, தமிழகத்திற்கு ஏன் குறைவாக ஒதுக்கியது என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

மேலும், கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் உறவினர்கள், வெளிநாடு சென்று வந்தவர்களின் உறவினர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென்றும், முன்வர தவறினால் அவர்களை கட்டாயப்படுத்தலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டுமென தெரிவித்த நீதிபதிகள், அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் செய்ய வேண்டுமென்றும் எனவும் உத்தரவிட்டனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of