நாசா பொருட்கள சேர்த்து அனுப்பிட்டாங்களா..? ஏன் இப்படி பண்ணாங்க..? கிளம்பிய புது சர்ச்சை..!

1259

சந்திரயான் -2 வின் விக்ரம் லேண்டர் இன்று அதிகாலை 1மணியிலிருந்து 2மணிக்குள் நிலவின் தென்துருவப்பகுதியில் தரையிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விக்ரம் லேண்டர் திரையிறக்கும் நேரத்தில், அதன் உடனான இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

இஸ்ரோ விஞ்ஞாணிகள் சோகமாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு முக்கிய அரசியல் தலைவர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இணைப்பு துண்டிக்கப்பட்டது குறித்து சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.

அது என்னவென்றால், நாசாவின் பே லாட்டை சந்திரயான-2 உடன் சேர்த்து அனுப்பியுள்ளதாகவும், இதனால் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, சந்திரயான் – 2 போன்ற மிகப்பெரிய பிராஜெக்ட் பண்ணும் போது மற்ற நாடுகளில் இருந்து பொருட்களை வாங்கவே கூடாது.

நாம் ஒரு குறிக்கோளுடன் கருவிகளை உருவாக்கி இருப்போம். மற்றவர்கள் வேறு மாதிரி கருவிகளை உருவாக்கி இருப்பார்கள் என்று சிலர் கருத்து கூறி வருகின்றனர். இந்த கருத்தில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்றும் தெரியவில்லை.

ஆனால் எப்போதும் விண்வெளி தொடர்பானவை தயாரிக்கும்போது மற்ற நாடுகளின் பொருட்கள் தேவைப்படுவது இயல்பு தான். எந்த உள்நோக்கத்திற்காக இந்த சர்ச்சை கிளம்பியுள்ளது என்று புரியவில்லை.

இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் விக்ரம் லேண்டர் எங்கே சென்றது என்றும் தெரியவில்லை, அதனுள் இருந்த நாசாவின் கருவிகளுக்கும் என்ன நடந்தது என்பது புதிராகவே உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of