மாஸ்க் இருந்தும் அணியாத கமல்..! காரணம் என்ன..?

480

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் கமல். எப்போதும் தமிழ் சினிமாவில் புதுமைகளை கொண்டு வந்த இவர், வித்தியாசமான திரைப்படங்களிலேயே நடித்து வந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வரும் கமல், இடையில் இந்தியன் 2 படத்திலும் நடித்து வந்தார். இதற்கிடையே, ஷீட்டிங்கின்போது, கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் சங்கர், கமல் ஆகியோர் முன்னிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மாஸ்க் அணிந்துவந்த நடிகர் கமல், செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியதும் மாஸ்கை கழட்டிவிட்டார். இதனைப்பார்த்த நெட்டிசன்கள் சிலர், மாஸ்க் இருந்தும் அணியாமல் இருந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், மாஸ்க் அணியாமல் இருந்ததற்கு மறதி காரணமா..? அல்லது விளம்பர நோக்கத்தோடு மாஸ்க் அணியவில்லையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதோடு சேர்த்து, பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணியும் மாஸ்க் அணியாதது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement