“ஓவர் வெயிலுப்பா அதான் ஹெல்மட் போடல”! உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்!

625

தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தக்கோரி, சென்னைஉயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்றது. இந்த விசாரணையின்போது, தமிழகத்தில் ஹெல்மெட் அணிபவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த, தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பைக்ரேஸில் இறந்த சென்னை இளைஞர் கூட ஹெல்மெட் அணியவில்லை என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.அப்போது,தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும், வெயில் அதிகமாக இருப்பதால் பலர் ஹெல்மெட் அணிவதில்லை என்று பதில் தெரிவித்தார்.

இதையடுத்து, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை குறித்து பதில் அளிக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவி்ட்டனர்.

போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர், துணை ஆணையர் ஆகியோர் வரும் 6 ஆம்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of