நீரைத் திறக்க தமிழகம் வலியுறுத்தாதது ஏன் ? வைகோ கேள்வி

350

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் 19.5 டி.எம்.சி. நீரைத் திறக்க தமிழகம் வலியுறுத்தாதது ஏன்? என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் குறுவை சாகுபடி, தமிழக விவசாயிகளின் நிலை மற்றும் நீர் பற்றாக்குறை பிரச்சினைகளை தெளிவாக எடுத்துரைத்த பின்னர் காவிரியில் 9.19 டி.எம்.சி. நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

கர்நாடகா அணைகளுக்கு தண்ணீர் வரத்தை அடிப்படையாகக் கொண்டு, தண்ணீர் திறக்க வேண்டும் என்றுதான் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது என்றும் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறவிலல்லை என்றும் கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறியதற்கு வைகோ பதில் அளித்துள்ளார்.

மேட்டுர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் இந்த ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி குறுவைச் சாகுபடிக்குத் தண்ணீர் திறப்பதற்கு முடியாத சூழல் நிலவுகிறது என்றும் இந்த சூழலில், குறுவைச் சாகுபடி பயிர்களைக் காப்பாற்றவும், குடிநீர் தேவைக்கும் தமிழகத்தின் பங்கான 19.5 டி.எம்.சி. நீரைப் பெறுவதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள  வேண்டும்” என்று வலியுறுத்துகிறேன்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of