காற்றின் மொழி படத்திற்கு ஏன் தடைவிதிக்கக்கூடாது?

373
kaatrin-mozhi

காற்றின் மொழி திரைப்படத்திற்கு ஏன்? தடை விதிக்கக் கூடாது என படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த தைனேசராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் படத் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஜீரோ என்ற படத்தின் தெலுங்கு உரிமையை தனக்கு அளிப்பதாகக் கூறி 7 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் உறுதி அளித்தபடி உரிமையை வழங்காததால், தனது பணத்தை திருப்பிக் கொடுக்கும் வரை காற்றின் மொழி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, படத்துக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என பதிலளிக்குமாறு தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் ஓசோன்  என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.