“கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம் இதுதான்” – அதிர்ச்சி தரும் மருத்துவர்களின் ஆய்வு..!

1442

சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் சீனாவில் வுகான் மாநிலத்தில் ஒரு நோயாளி மருத்துவரிடம் சென்றார். அதிகப்படியான காய்ச்சல் அதை தொடர்ந்து மூச்சுத்திணறல் அடிக்கடி உண்டாவதாக தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து அவருடைய உடல் பலவீனம் அடைந்திருக்கிறது. இதே போன்று மக்கள் தொடர்ந்து மருத்துவரிடம் வரும் போது மருத்துவர்கள் இது புதிய வைரஸால் ஒரு தொற்று பரவி இருப்பதை உணர்ந்து கண்டறிந்தார்கள். இது நடந்தது டிசம்பர் 31 ஆம் தேதி நடந்தது.

இதை தொடர்ந்து சீனாவின் தேசிய சுகாதார கமிஷன் இதை உறுதி செய்து மக்களுக்கு விழிப்புணர்வை தீவிரமாக செய்ய தொடங்கியது. இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக தாமதிக்கமால் மருத்துவரை அணுகவும் வலியுறுத்தியது. தற்போது சீனாவின் வுகான் மாநிலத் திலிருந்து 13 மாகாணாங்களிலுள்ள மக்களுக்கு தொற்று பரவ தொடங்கியிருக்கிறது.

சீனாவில் இருக்கும் மத்திய நகரம் வுகான் மாநிலம். இங்கு 1 கோடி 10 இலட்சம் மக்கள் வசித்து வரு கிறார்கள். இங்கிருக்கும் மக்களுக்குத்தான் இந்த வைரஸ் தொற்று தொடங்கியுள்ளது. குறிப்பிட்ட இந்நகரத்திலிருந்து தொடங்கிய இந்த வைரஸ் தொற்றுக்கு காரணம் இந்த மாநிலத்தில் இருக்கும் மிகப்பெரிய இறைச்சி மற்றும் கடல் உணவுகள் கொண்ட சந்தைபகுதி என்று கண்டறிந்தார்கள்.

சீன நாட்டில் ஆடு, கோழி தவிர பல தரப்பட்ட அதிகப்படியான விலங்குகளின் இறைச்சியையும், கடல் வாழ் உணவுகளையும் சாப்பிடுகிறார்கள். இந்த இடத்தில் இருந்து தான் விலங்குகளை வெட்டி விற்பனை செய்யும் இடத்தில் பரவியிருப்பதாக கண்டறிந்துள்ளது.

இப்படி தான் விலங்குகளிடைருந்து மனிதனுக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கிறது. இந்த வைரஸானது நுரையீரலை தாக்கி நிமோனியா காய்ச்சலை உண்டாக்குகிறது. இவை மனிதனிடமிருந்தும் மனிதனுக்கு பரவும் என்றும் சீனா தேசிய சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

Advertisement