வாட்ஸ் அப் ஸ்டேடஸ் 15 வினாடி ஏன்? – வெளியான தகவல்..!

387

ஊரடங்கு உத்தரவால் வீடுகளில் முடங்கியுள்ள பொதுமக்கள், நாளொன்றுக்கு 4 மணி நேரத்துக்கும் அதிகமாக சமூகவலைதளங்களில் உலாவி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு உலக நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

இதனால் வீடுகளுக்குள்ளேயே முடங்கிகிடக்கும் மக்கள் அதிக நேரத்தை, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களிலேயே கழிக்கின்றனர்.

குறிப்பாக, ஊரடங்கு உத்தரவுக்கு முந்தைய கால கட்டத்தில் நாளொன்றுக்கு சுமார் இரண்டரை மணி நேரம் மட்டுமே சமூகவலைதளங்களை சராசரியாக பயன்படுத்தியுள்ளனர்.

ஆனால், தற்போது 87 சதவீகிதம் அதிகரித்து, 4 மணி நேரம் சமூக வலைதளங்களில் இணையதள பயன்பாட்டாளர்கள் உலாவி வருவது தெரியவருகிறது. டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை நகரங்களில் வசிப்பவர்களிடம் ஹாம்மர் கோப் கன்சூமர் ஸ்னாட்ஷாட் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இருந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

குறிப்பாக, பேஸ்புக், வாட்ஸ் ஆப் மற்றும் ட்விட்டரை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 75 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதர இணையதளங்களை பயன்படுத்துவோரில் சுமார் 72 சதவீதம் பேர் கொரோனா பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள விரும்புவதும் தெரியவந்துள்ளது. அதேபோல், தொலைக்காட்சி பார்ப்பவர்கள் மற்றும் வானொலி கேட்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் 15 வினாடி:

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் இந்தியாவில் வாட்ஸ் அப் பயன்பாடு 40 சதவிகிதம் அதிகரித்துள்ளதாம். இணைய தேவை அதிகப்படியாக பயன்படுத்தப்படுவதால் பல டெக் நிறுவனங்களும் வீடியோ தரத்தைக் குறைப்பதாக அறிவித்தன.

அந்த வகையில் ஃபேஸ்புக், நெட்ஃப்ளிக்ஸ், இன்ஸ்டாகிராம் என அத்தனைத் தளங்களிலும் ஹெச்டி வீடியோ தரம் நிறுத்தப்பட்டது. சமூகவலைதளங்களில் கொரோனா வைரஸ் குறித்து வதந்திகள் பரவுவதை தடுக்கவும், மொபைல் டேட்டாக்களை சிக்கனமாக பயன்படுத்தவும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் பதிவிடப்படும் வீடியோவின் அளவு 30 நொடியிலிருந்து 15 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of