என்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? மோடி ஆவேச பேச்சு .

315
modi9.3.19

உத்தரப்பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரைநிகழ்த்திய பிரதமர் மோடி பால்கோட் பகுதியில் தீவிரவாத அமைப்புகளின் கூடாரங்களை இந்திய விமானபடை தாக்கியழித்ததை பற்றி கேள்வி எழுப்பும் காங்கிரஸ் நவம்பர் 26ம் தேதி 2008ம் ஆண்டு கடல் வழியாக வந்த 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பை நகரில் தாக்குதல் நடத்தியபோது என்ன செய்தார்கள் என்று வினைவினார்.

தொடர்ந்து புல்வாமா தாக்குதலை பற்றி பேசிய பிரதமர். 40 துணை ராணுவ படையினர் கொல்லப்பட்ட பிறகும் அதை கண்டு நான் அமைதியாக இருக்கவேண்டுமா ? இல்லை நான் தூங்கவேண்டும் ? அல்லது சென்ற ஆட்சியை போல நானும் பிறகுபார்த்துக்கொள்ளலாம் என்று இருக்கவேண்டுமா ? நீங்கள் எதற்காக என்னை தேர்ந்தெடுத்தீர்கள் ? என்று ஆவேசமாக பேசினார்.

இதைத்தொடர்ந்து லக்னோ, ஆக்ரா மற்றும் கசியாபாத் உள்ளிட்ட இடங்களில் திறக்கவிருக்கும் மெட்ரோ ரயில்சேவைகளை பற்றி அவர் உரையாற்றினார்.