தமிழகம் முழுவதும் பரவலாக மழை – விவசாயிகள் மகிழ்ச்சி

469

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது . கடலூர், சேலம், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூரில்…

கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.  கொட்டி தீர்த்த கனமழையால் கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில்…

சேலத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விவசாயத்திற்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்

தஞ்சையில்…

தஞ்சையில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்நிலையில், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of