தமிழகத்தில் பரவலாக மழை… 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

739

தொடர் மழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, கடலூர் மற்றும் சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்றிரவு பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி, மாங்குடி, கங்களாஞ்சேரி, கூத்தாநல்லூர், வடகண்டம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில்,  தொடர் மழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, கடலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அந்ததந்த மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இதேபோல புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

Advertisement