“என்னை ரொம்ப லவ் பண்றாரு மைலார்ட்..!” – கணவரை வெறுத்து விவாகரத்து கேட்ட வினோத மனைவி..!

1676

தன்னை தினந்தோறும் குடித்துவிட்டு கொடுமை செய்கிறார், வரதட்சணை கேட்டு தினந்தோறும் துன்புறுத்துகிறார் என சில காரணங்களை கூறி விவாகரத்து கேட்ட பெண்களை பார்த்திருப்போம்.

ஆனால் தன்னை அளவுக்குமீறி காதலிக்கிறார் என கூறி ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்  விவாகரத்து கேட்ட வழக்கு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

விவாகரத்து கேட்ட பெண், அதற்காக காரணங்களை அடுக்கியபோது பெண்களே ஆச்சரியப்பட்டனர். கணவர் தன்னை எந்த கேள்வியும் கேட்பதில்லை. நான் உதவி கேட்பதற்கு முன்பே வீட்டு வேலைகள் அனைத்தையும் கவனித்துக் கொள்கிறார்.

சமையல் கூட எனக்காக பிடித்தாக செய்து வைக்கிறார். வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்கிறார். என் மீது கோபமே படுவதில்லை. என்ன சொன்னாலும் மறுப்பு தெரிவிக்காமல் செய்கிறார்.

எங்களுக்குள் எந்த பிரச்னை, சண்டை எதுவுமே இல்லை. இது எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை. இருவருக்குள்ளேயும் எந்த சண்டை, கோபம் இல்லாமல் வாழ்க்கை செல்வது நரகம் போல் உள்ளது.

குறிப்பாக அவர் ரொமாண்டிக்காக நடந்து கொள்வதும், தினம் தினம் பரிசுகளால் சப்ரைஸ் கொடுப்பது எல்லாமே சரியாகச் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு சின்ன விவாதங்கள் கூட எங்களுக்குள் நடக்கவில்லை. இதனால் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று புஜைரா நகர கோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய அதீத அன்பால் மனைவி விவாகரத்து கேட்டுள்ளது தொடர்பாக அந்த கணவர் பேசியுள்ளார். “நான் எதையும் தவறாக செய்ததாக தெரியவில்லை. அவளை சில நேரங்களில் ஏமாற்றமடையச் செய்யுங்கள்; கோரிக்கைகளை நிராகரியுங்கள் என்று என்னிடம் பலரும் அறிவுரை செய்தனர்.

ஆனால், என்னால் அதனை செய்ய முடியவில்லை. நான் எப்போதுமே ஒரு சரியான கணவராக இருக்க விரும்பினேன்” என்று மனம் உடைந்து கூறியுள்ளார்.

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
R. Natarajan Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
R. Natarajan
Guest
R. Natarajan

The court can help her by DISMISSING HER PLEA.