கள்ளக்காதல் மோகம்..! கணவனின் உடலில் மனைவி செய்த கொடூரம்..!

3604

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பாவிஷ்யா பர்ஹகோஹைன். இவருக்கும் குவின்சியா என்ற பெண்ணிற்கும் 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் இரட்டைக் குழந்தையும் உள்ளது.

குவின்சியாவிற்கு மும்பையில் உள்ள கால் சென்டரில் வேலை கிடைத்த நிலையில், தம்பதியினர் மும்பையை அடுத்த நைகா பகுதியில் வசித்து வந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சத்விர் நாயர் என்ற நபருடன், குவின்சியாவிற்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இந்த விஷயம் குவின்சியாவின் கணவருக்கு தெரிந்ததால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பிறகு கணவர் தூங்க சென்றுவிட்டார். அவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது, கணவரின் கால்களை கட்டி, கொதிக்கும் எண்ணெயை அவர் முதுகில் ஊற்றியுள்ளார் குவின்சியா. மேலும் அவர் கண்களில் மிளகாய் பொடியையும் குவின்சியா தூவியுள்ளார். பாவிஷ்யா அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், போலீசுக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ், குவின்சியாவை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of