“யப்பா…, என்னா அடி!” கள்ளக்காதலியை வெளுத்து வாங்கிய மனைவி!

5270

ஹைதராபாத்தில், தனது கணவனின் கள்ளகாதலி வீட்டிற்குள் நுழைந்து, கணவனுக்கும் அவருடைய கள்ள காதலிக்கும் தர்ம அடி கொடுத்த மனைவி, 2 பேரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் கொட்ட கொம்மு கூடம் பகுதியை சேர்ந்த லஷ்மன்-சுஜன்யா ஆகியோருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு சில காலம் மனையியுடன் வசித்த லஷ்மன், பின்னர் கூக்கட்பள்ளியில் வசிக்கும் அனுஷா என்ற பெண் வீட்டிற்கு சென்று அங்கு நிரந்தரமாக தங்கிவிட்டார்.

இதனால் மனவேதனை அடைந்த சுஜன்யா எவ்வளவோ கெஞ்சி கேட்டும் லஷ்மன் வீட்டுக்கு வரவில்லை. எனவே விவாகரத்து கேட்டு சுஜன்யா அனுப்பிய நோட்டீஸூக்கு லஷ்மன் மௌனமாக இருந்து வந்துள்ளார்.

இதனால் கோபம் அடைந்த சுஜன்யா, உறவினர்களுடன் அனுஷா வீட்டிற்கு சென்று கணவன் லஷ்மன் மற்றும் அவருடைய கள்ளகாதலி அனுஷா ஆகியோரை தாக்கி கூக்கட்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

லஷ்மனின் கள்ளகாதலி அனுஷா ஏற்கனவே திருமணம் ஆகி கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement