காதலியுடன் உல்லாசம்.. கொத்தாக பிடித்த மனைவி.. இறுதியில் நடந்த தரமான சம்பவம்..

5475

தெலுங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்ட தலைநகர் பத்ராச்சலம் நகரில் ஆயுதப்படை காவலராக பணியில் இருப்பவர் சுபாஷ். அவர் கடந்த 2017ஆம் ஆண்டு உறவினர் வீட்டு பெண்ணை திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சுபாஷ்க்கு வேறொரு பெண்ணுடன் தவறான பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனியார் விடுதி ஒன்றில் அந்த பெண்ணுடன், கணவர் சுபாஷ் உல்லாசமாக இருந்தபோது போலீசாருடன் அங்கு சென்ற சுபாஷ் மனைவி கையும் களவுமாக இருவரையும் பிடித்தார்.

மேலும் இருவரையும் செருப்பு, கட்டைகள் ஆகியவற்றால் அடித்து கொண்டே காவல் நிலையத்தில் அழைத்துச் சென்றார். தற்போது காவலர் சுபாஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

Advertisement